Breaking News LIVE: சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
நாடு முழுவதுமுள்ள மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக கூட இந்த முறை சுமார் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
அதாவது தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. அதேநேரம், பாஜக தலைமையிலான கூட்டணி சுமார் 290+ இடங்களில் முன்னிலை வகிக்க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 230+ இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு கூட்டணிகளுக்குமே சுமார் 60 இடங்கள் தான் வித்தியாசம் உள்ளன. இதனால், மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அதன்படி இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியக் கூட்டணி தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி மறைந்த பின் தலைவராக 2018ஆம் ஆண்டு பொறுப்பேற்றது தொடங்கி 2019 மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் இந்தத் தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 சதவீத வெற்றியை தேடித் தந்துள்ளதாக திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
Sunitha Williams: சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
Sunitha Williams: சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்!
LIVE: We're launching a new ride to the @Space_Station! @NASA_Astronauts Butch Wilmore and Suni Williams are scheduled to lift off on @BoeingSpace's #Starliner Crew Flight Test, riding aboard a @ULALaunch Atlas V rocket, at 10:52am ET (1452 UTC). https://t.co/4fm8GEfZNs
— NASA (@NASA) June 5, 2024
மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்- அண்ணாமலை
மக்களவைத் தேர்தலில், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது: பங்கேற்கும் சந்திரபாபு, நிதிஷ்
பாஜக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Breaking News LIVE: அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 5, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருவண்ணாமலை,விழுப்புரம், திண்டுக்கல், கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: சென்னையில் மழை!
சென்னையில் கோயம்பேடு, நெற்குன்றம், இராயப்பேட்டை, மயிலாப்பூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.