மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 1. 39 லட்சம் கோடி நிதி விடுவிப்பு; தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 700 கோடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Key Events
Background
- நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். நேற்று இரவு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக் கொண்டனர். 7.30 மணிக்கு தொடங்கிய இந்த பதவியேற்பு நிகழ்ச்சியானது இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
- இரண்டு மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாடு அரசு வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
- பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
- நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 19 வது லீக் போட்டி நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது.
- நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மேல், 'இம்ரான் கானை விடுதலை செய்’ என்ற வாசகத்துடன் விமனம் ஒன்று பறந்துள்ளது. இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
22:13 PM (IST) • 10 Jun 2024
Breaking News LIVE: மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ. 1. 39 லட்சம் கோடி நிதி விடுவிப்பு; தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 700 கோடி
மத்திய அரசு மாநிலங்களுக்கு வரி பகிர்வு நிதியாக ரூ. 1. 39 லட்சம் கோடி நிதியை விடுவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ. 5, 700 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 25, 069 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
19:52 PM (IST) • 10 Jun 2024
Breaking News LIVE: மத்திய இணை அமைச்சருக்கு எல்.முருகனுக்கு இரண்டு துறைகள் ஒதுக்கீடு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சருக்கு எல்.முருகனுக்கு இரண்டு துறைகள் ஒதுக்கீடு. இதற்கு முன்பு இருந்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இருந்த நிலையில் கூடுதலாக நாடாளுமன்ற விவகார துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
19:46 PM (IST) • 10 Jun 2024
Breaking News LIVE: மீண்டும் நிதி அமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்
மீண்டும் மத்திய நிதி அமைச்சராகிறார் நிர்மலா சீதாராமன்
19:35 PM (IST) • 10 Jun 2024
Breaking News LIVE: ஜேபி நட்டாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் ஒதுக்கீடு
Breaking News LIVE: பாஜக முன்னாள் முதல்வர் ஜேபி நட்டாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
19:31 PM (IST) • 10 Jun 2024
Breaking News LIVE: பாஜக எம்.பி அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு துறை
ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion