Breaking News LIVE: இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் - கார்கே
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டிடுகிறார்.
பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3வது நாளாக கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தார். பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டார். மாலை 5 மணியளவில் குமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கினார். நேற்று அதிகாலை 5.30 மணி வரை சுமார் 11 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்ட பின், தியான மண்டபத்தில் இருந்து வெளியே வந்து சூரிய உதயத்தை கண்டு வழிபாடு செய்தார்.
பின் மாலை 6 மணியளவில் தியானம் தொடங்கினார். 3வது நாளாக இன்று தியானம் மேற்கொள்கிறார். சுமார் 45 மணி நேரம் தியானத்திற்கு பின் இன்று பிற்பகல் 3 மணிக்கு தியானத்தை முடிக்கிறார். இது போன்ற சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
Breaking News LIVE: இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் - கார்கே
Breaking News LIVE: இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை
டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி பயணத்தை முடித்து புறப்பட தயாரான பிரதமர் மோடி
தியானத்தை முடித்து, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி தற்போது ஹெலிபேட் நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி
45 மணி நேர தியானத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, திருவள்ளுவர் சிலைக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.
Breaking News LIVE: இறுதி கட்ட தேர்தல்.. மதியம் 1 மணி நிலவரப்படி 40.09% வாக்குப்பதிவு..!
7 ஆம் கட்டமான இறுதிகட்ட தேர்தல வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபற்று வருகிறது. தற்போது மதியம் 1 மணி நிலவரப்படி 40.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.