Breaking Tamil LIVE: வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மனு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கடுமையான வானிலை நிலவுகிறது. வழக்கமாக மே மாதம் வரும் அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டையை பிளக்கும் அளவு வெப்பநிலை பதிவாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
வரும் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வட உள் மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 95 தொகுதிகளில் வரும் மே 7ம் தேதி மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, “ “மக்களின் சொத்துக்களை அதிகரிக்கும் விதமாக பாஜக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி இருவரும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டை எக்ஸ்ரே செய்வோம் என்று பேசுகின்றனர். நான் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸின் எண்ணம் நிறைவேற அனுமதிக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுக்க விருமுகிறேன்” என கூறியுள்ளார். இதுபோன்ற சூழலில் நாட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்து உடனுக்குடன் காணலாம்.
காஷ்மீரில் பெரும் பனிச்சரிவு! வனப்பகுதியில் ஏற்பட்டதால் சேதம் தவிர்ப்பு
காஷ்மீரில் உள்ள சர்பால் பகுதியில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவு வனப்பகுதியில் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை.
வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. மனு
வாக்கு இயந்திரங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அசாதுதீன் ஒவைசி சமநிலையை இழந்து விட்டார் - ஹைதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா.
#WATCH | Hyderabad, Telangana: On AIMIM Chief Asaduddi Owaisi, BJP candidate from Hyderabad Lok Sabha seat, Madhavi Latha says, "He is a person who shoots everybody. Nobody would want to shoot anybody. We know our limits. We know legally what is fair, and what is unfair. We don't… pic.twitter.com/PN8PrqnMKG
— ANI (@ANI) April 29, 2024
Breaking Tamil LIVE: வடதமிழ்நாட்டின் அடுத்த 2 நாட்கள் வெப்ப அலைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்..!
வடதமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வெப்ப அலை வீசும். வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Breaking Tamil LIVE: நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது..!
நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.