Breaking Tamil LIVE: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
காலநிலை மாற்றம் மற்றும் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மே மாதம் அக்னி நட்சத்திரத்தின் போது 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும் வெப்பநிலை தற்போது ஏப்ரல் மாதம் முதலே பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் இந்தியாவில் பதிவாக அதிகபட்சமான வெப்பநிலையில் சேலம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. அதாவது 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி சேலம் 3வது இடத்திலும், 109 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஒடிசா 2வது இடத்திலும், 110 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி ஆந்திரா முதல் இடம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கருர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்படி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கான மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. சுமார் 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சரை கூட்டணி கட்சிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாளை அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி, கேரளா, கர்நாடகா மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் இருக்கும் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் செய்து வருகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் நாட்டில் நடக்கும் முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றம்
சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
பாட்னா தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருகின்ற ஏப்ரல் 29ம் தெதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் மீது பாஜகவும், பிரதமர் மோடி மீது காங்கிரஸும் புகார் அளித்ததன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.