Breaking News LIVE :ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தரப்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜக எப்படியாவது கால் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு கச்சத்தீவு விவகாரம் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக - காங்கிரஸ் எல்லாம் தெரிந்தே கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். மேலும் அப்போது முதல் இப்போது வரை சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் அவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் பா.சிதம்பரம் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பாஜக தரப்பில் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நிர்மலா சீதாராமன், அமித்ஷா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காணலாம்.
CM Stalin On Katchatheevu : இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்தினார் பழனிசாமி! சிறுபான்மையின மக்களுக்கு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டு, அக்கறை வந்தது போன்று நடிக்க ஆரம்பித்திருக்கிறார்! கூட்டாட்சி என்று சொல்லி, காட்டாட்சி நடத்த அத்தனை வேலையும் பார்க்கிறார் பிரதமர் மோடி! இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா?
- தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சி.ஏ.ஏ. சட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜூன் 4ம் தேதிக்கு பிறகு சிஏஏ சட்டம் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழ்நாடு வருவார்” - முதலமைச்சர் ஸ்டாலின்
தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழ்நாடு வருவார், வெள்ளம் வந்தால் வரமாட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின், வேலூரில் மேற்கொண்டு வரும் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
மஹூவா மொய்த்ரா எம்.பி. மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
முன்னாள் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Lok Sabha Election 2024: விருது நகரில் கைப்பற்றப்பட்ட 16.7 கிலோ தங்கம்!
உரிய ஆவணங்கள் இன்றி மூன்று கூரியர் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 16.7 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.