Breaking News LIVE: திமுக தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக கூட்டணியில் அம்முக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று கோவையில் ரோடு ஷோவில் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட நிலையில் இன்று சேலம் வருகை தருகிறார். சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் மதியம் நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதில் முக்கியமாக பாஜக கூட்டணியில் இருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.
பாமக மற்றும் அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம் முதலே இழுபறியில் இருந்தது. இந்நிலையில் நேற்று அதிமுக மற்றும் பாமக இடையே கூட்டணி முடிவாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் அரசியல் ட்விஸ்டாக பாமக திடீரென பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக இன்று சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொள்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். நடப்பாண்டில் மட்டும் சுமார் 8 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக பாஜக கூட்டணியில் இணைந்த நிலையில், அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தேமுதிக இடையே தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளை முதல் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் வரையில் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த சூழல் இருக்கும் நிலையில், தேசிய அளவில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் சிஏஏக்கு எதிராக தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தரப்பில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளை காணலாம்.
திமுக தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்
திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை 10 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். வேட்பாளர் பட்டியலும் நாளையே வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
400 தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறவர் தரம் தாழ்ந்து பேசமாட்டார் - பிரதமர் பேச்சுக்கு டி.ஆர்.பாலு பதில்
400 தொகுதிகளில் வெற்றி பெறப்போகிறவர் தரம் தாழ்ந்து பேசமாட்டார் என்று பிரதமர் மோடி விமர்சனத்திற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிட 250 விருப்பமனுக்கள் - சூடுபிடிக்கும் தேர்தல்
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிட 250 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊட்டியில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு இ - மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.