Breaking News LIVE: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகி கைது
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்பதால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை கட்சியின் தலைவர் முதல் வார்டு பொறுப்பாளர் வரை அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மக்களவைத் தேர்தல் என்பதால் தேசிய கட்சிகளின் ஆதிக்கமும் அவர்களின் நடவடிக்கைகளும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஆளும் பாஜக பிரதமர் மோடியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கவுள்ளதால், கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பொதுக்கூட்டங்களில் பேசியும், தொலைகாட்சிகளில் விளம்பரங்கள் செய்தும், செய்தித் தாள்களில் விளம்ரம் செய்தும் டிஜிட்டல் வழியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகின்றார். இந்த ஆண்டில் இவர் தமிழ்நாட்டிக்கு 5வது முறையாக வருகின்றார்.
இதுமட்டும் இல்லாமல் ஆட்சியில் உள்ள பாஜக மகளிர் தினத்தை முன்னிட்டு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைத்தது. இதனால் ரூபாய் 918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமயல் எரிவாயு சிலிண்டர் தற்போது ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் நேற்று அதாவது மார்ச் 14ஆம் தேதி பெட்ரோல் விலையில் ரூபாய் 2- குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் தமிழ்நாட்டில் ரூபாய் 102.63 காசுகளுக்கு விற்பனை செய்து வந்த நிலையில் இன்று முதல் ரூபாய் 100.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பெட்ரோல் விலையில் தமிழ்நாடு அரசு ரூபாய் 3 குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் உள்ள பாஜக விலை குறைப்பு நடவடிகைகளில் கவனம் செலுத்தி வரும் நிலை, மக்களவையில் பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றது. காங்கிரஸ் அறிவித்துள்ள வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, “பெண்களுக்கு வேலைவாப்புகளில் 50 சதவீதம் ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு” உள்ளிட்டவை. மக்களவையில் எதிர்கட்சியினர் வரிசையில் உள்ள கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் ஏற்கனவே 82 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
இன்றைய தினத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளது. இதில் பாஜக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெற்றுள்ளது என பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று வருகின்றது, இதுபோன்று உங்களைச் சுற்றி நடைபெறும் மிகவும் முக்கியமான செய்திகளை ப்ரேக்கிங் செய்திகளாக இங்கு காணலாம்.
Breaking News LIVE: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகி கைது
தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட 46% த்தில் இருந்து 50% மான அகவிலைப்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவவரி 1, 2024 முதல் தேதியிட்டு வழங்க வேண்டும் என அனைத்து அரசு துறை தலைவர்களுக்கு நிதித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Breaking News LIVE: கோவையில் பிரதமரின் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி
கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள பாஜகவின் பேரணிக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Breaking News LIVE: கடற்படை முன்னாள் தளபதி காலமானார்
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (90) உடல்நலக் குறைவால் செகந்திராபாத்தில் காலாமானார்.
Breaking News LIVE: கே.சி.ஆர் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள், கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.