மேலும் அறிய

Breaking Tamil LIVE: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு - நெற்றியில் காயம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking Tamil LIVE: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு - நெற்றியில் காயம்

Background

தமிழ்நாடு:

பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டதாக, தேர்தல் பரப்புரைய்ன்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மறுபுறம், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக பிரசாரத்தின்போது பாமக நிர்வாகி மண்டை உடைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இப்படி தேர்தல் பரபரப்புக்கு மத்தியில்,  அரியலூர் அருகே செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 24 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திள்ளது.  தமிழகத்தில் இன்று ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா: 

தேசிய அரசியலில் கவனம் செலுதினால்,  மோடிக்கு தோசை பிடிக்குமா இல்லை, வடை பிடிக்குமாங்கிறது தமிழர்களுக்கு பிரச்னை இல்லை  என ராகுல் காந்தி சாடியுள்ளார். தாங்கள் ஆட்சி அமைத்தால்  நீட் தேர்வை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளுக்கே விட்டுவிடுவோம் என பேசி ராகுல் காந்தி கவனம் ஈர்த்துள்ளார். இதனிடையே, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற தங்களின் முன் அனுமதி தேவை என குஜராத் அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாக்கோமா நோயால் இந்தியாவில் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம்: 

சர்வதேச விவகாரங்கள் பக்கம் கவனத்தை திருப்பினால், இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு அமைப்பு ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளை கண்டறிய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 4 நாடுகளுக்கு போப் பிரான்சிஸ் பயணம் செய்ய உள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ராணுவ செயல்பாடுகள் மீதான அதிருப்தி இருந்தபோதிலும், தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். 

விளையாட்டு: 

விளையாட்டு உலகில் ஐபிஎல் தொடரின் இன்றைய லிக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. : லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது காயத்தை மறைப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. பாரீஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் இந்திய குழுவின் தலைவர் பதவியை பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ராஜினாமா செய்துள்ளார்.

21:51 PM (IST)  •  13 Apr 2024

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு - நெற்றியில் காயம்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் பேருந்து யாத்திரையின் மீது அவர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

17:47 PM (IST)  •  13 Apr 2024

அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும், எந்த பூச்சாண்டிக்கும் பயப்படமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17:29 PM (IST)  •  13 Apr 2024

குன்றத்தூர் 1425 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிரடி

சென்னை குன்றத்தூர் அருகே 1425 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

16:25 PM (IST)  •  13 Apr 2024

அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

15:18 PM (IST)  •  13 Apr 2024

வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு சீமான் வாக்கு சேகரிப்பு

வேலூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்து வருகிறார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Sabarimala Temple: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
Embed widget