மேலும் அறிய

Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக, இந்த புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளது, இந்த மாவட்டங்களில் பெய்த பெருமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளது. இதனால், மின்சாரம் இல்லாமல் குடிநீர் இல்லாமல் மக்கள் கடந்த 3 நாட்களாக அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

ஃபெஞ்சல் புயல்:

தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார். பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:

இழப்பீடு முழு விவரம்:

  • புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 இலட்சம் ரூபாய் வழங்கிடவும்
  • சேதமடைந்த குடிசைகளுக்கு 10 ஆயிரம் வழங்கிடவும்
  • முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும்,
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும்,
  • பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதம் இருப்பின் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22 ஆயிரத்து 500 வழங்கிடவும்
  • மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8 ஆயிரத்து 500 ஆகவும் வழங்கிடவும்,
  • எருது. பசு உள்ளிட்ட ரூ.37,500/-ஆக வழங்கிடவும், கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக 37 ஆயிரத்து 500 ஆகவும்
  • வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 ஆக வழங்கிடவும் அறிவித்துள்ளார்.

குடும்ப அட்டைக்கு ரூபாய் 2 ஆயிரம்:

அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம்,கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா? அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
Embed widget