Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- ஜுன் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட, பல்கலைக்கழக மானியக் குழு-தேசிய தகுதித் தேர்வு (UGC-NET) 2024 ஜூன் அமர்வு மற்றும் பிற தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி NCET 2024 தேர்வு ஜூலை 10ஆம் தேதியும், கூட்டு CSIR UGC NET ஜூலை 25 முதல் 27ஆம் தேதி வரையும் நடத்தப்படும். UGC NET ஜூன் 2024 அமர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய தேதிகள் மற்றும் தேர்வு முறை குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும் வகையில், "வரவிருக்கும் தேர்வுகளுக்கான NTA தேர்வு காலண்டர்" என்ற தலைப்பில் NTA அறிவிப்பு வெளியிடப்பட்டிள்ளது.
-
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி 20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டி மோதலில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பையில், 10 வருட காத்திருப்புக்குப் பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5 முறை ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தாலும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது.
- ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து ஃவோடபோன் நிறுவனமும் வாடிக்கையாளர் சேவை கட்டணத்தை அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: தொடக்க கல்வி இயக்குநராக இருந்த கண்ணப்பன்,பள்ளிக்கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுபான இறக்குமதியில் ஊழல் - சிஏஜி அதிர்ச்சி அறிக்கை!
டாஸ்மாக் மதுவை இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவுக்கு உரிய வரி செலுத்தப்படாத காரணத்தால் அரசுக்கு 30.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: மேற்கு வங்கம்: வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல்
மேற்கு வங்கம்: அத்துமீறல் தொடர்பாக, வியாபாரிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
#WATCH | Kolkata, West Bengal: Clash broke out between hawkers and shop owners over encroachment; police personnel present at the spot. pic.twitter.com/ri9DZ684h3
— ANI (@ANI) June 29, 2024
சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
சென்னை சைதாப்பேட்டை: கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு என புகாரையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.