மேலும் அறிய
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Key Events

பிரேக்கிங் நியூஸ்
Background
- நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி காமராஜர் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் அதிகமாக சுற்றிதிரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிக சிரமத்துடனே கடந்து செல்கின்றனர். சீர்காழி பிரதான சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை அவ்வழியாக வந்த மாடு முட்டி சாலையில் தள்ளியது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏதும் வரவில்லை இதனால் சிறு காயங்களுடன் அந்தப் பெண் உயர் தப்பினார். இந்த அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ள நிலையில் பொதுமக்கள் சாலையில் சுற்றி திரியும் கால்நடையின் உரிமையாளர் களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்து சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன் மற்றும் உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயார் உட்பட 5 பேர் மீது கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை மாதம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதியப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் 5 பேரும் நேற்று விடுதலை. முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு.
19:31 PM (IST) • 27 Jun 2024
சீமானுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி
அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு எக்ஸ் வலைதளம் மூலமாக ஆதரவளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்புச் சகோதரர் திரு. @Seeman4TN அவர்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்த @NaamTamilarOrg மாநிலப் பொருளாளர் திரு. ராவணன் அவர்கள்…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 27, 2024
17:54 PM (IST) • 27 Jun 2024
மறுகூட்டல் குறித்த வழக்கில் கிண்டலடித்த உயர்நீதிமன்ற கிளை
"சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால் தானாகவே Switch Off ஆகும் வகையில் ஒரு செயலியை கண்டுபிடிப்பது தொடர்பாக வழக்கு தொடரலாமே?" -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கிண்டல்
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு





















