Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- கனமழை காரணமாக கூடலூர், வால்பாறை, பந்தலூர் தாலுகாவில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் வெயிலே தெரியாத அளவுக்கு கோடை மழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும், மற்ற இரு தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது,
- நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்வது தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக முதல்முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. 543 உறுப்பினர் மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால், அவர்களது வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டி20 உலகக்கோப்பையில் நாளை நடைபெறும் 2 அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா - இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆட்டத்தின் போது பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - அமைச்சர் ரகுபதி
தேர்தல் காலங்களில் மட்டும் 10.5 % ஒதுக்கீடு குறித்து பேசி மக்களை ஏமாற்றுகிறது பாமக என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் @narendramodi அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/58RXMsIRNP
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 26, 2024
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.
Breaking News LIVE: உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை பாதிப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில், சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: பாலியல் புகார் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி
Breaking News LIVE: பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.