Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
டி20 உலகக் கோப்பை 2024ன் 51வது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8ல் மோத இருக்கின்றன. அரையிறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் இரு அணிகளும் இந்த போட்டியில் தீவிரம் காட்டும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் லூசியாவில் தொடங்குகிறது.
- பாஜக அரசு புதிதாக ஆட்சி அமைத்த பிறகு, 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) முதல் தொடங்க உள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வருகின்ற ஜூலை 3 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பின் இன்று கூடவுள்ள மக்களவை கூட்டத்தொடரில் புதிய எம்.பிக்கள் பதவியேற்கவுள்ளனர். இந்த மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாள்களிலும் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
- திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுகின்றனர். மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதேசமயம் இந்த இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பதால் அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
நாகையில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் கடிதம்
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்
நடிகர் விஜய் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 அதிகாரிகளை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு 3 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.