Breaking News LIVE: சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
-
நீட் முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை தலைவர் பதவியில் இருந்து சுபோத்குமார் சிங் நீக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்த நிலையில் நெட் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ள பிரதீப் சிங் கரோலாவுக்கு தேசிய தேர்வு முகமையின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வங்கதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றது.
-
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முதுநிலை நீட் தேர்வின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள சூரஜ் ரேவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
6 பேரல் மெத்தனால் சப்ளை செய்த படிப்பை பாதியில் விட்ட பொறியியல் பட்டதாரி
கள்ளச்சாராய வழக்கில் இஞ்சினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய மாதேஷ் என்பவர் 6 பேரல் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.
நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
பீகாரில் நீட் தேர்வு முறைகேடு காரணமாக 17 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
கள்ளச்சாராய வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு மருத்துவ சங்கம் கடும் கண்டனம்
நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு மருத்துவ சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.