Breaking News LIVE: நாளை ராகுல் காந்தி பிறந்தநாள் : கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். அதேநேரம் அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
- கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று துவங்கி வைக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே 8- இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அங்கு பணிகள் துவங்காமல் இருந்தது.
- அன்னியூர் சிவா, விசிக தலைவர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வாட்சப் DP-யில் வையுங்கள். விசிகவிற்கு இரண்டு இடங்களில் போட்டியிட வைத்து தேர்தலில் அங்கீகாரம் வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் - எம்பி ரவிக்குமார்
- எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வு.க்கு சாதகமாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் பி-டீம் மாக செயல்படுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டினார்.
- பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை கொன்ற தாத்தா கைது - உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோசியர் சொன்னதால் கொன்றதாக வாக்குமூலம்
- காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு பட்டப்பகலில் அரிவாள் வெட்டு - குடும்ப பிரச்னையில் கணவரே தாக்கியதாக தகவல்
- குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். தண்டவாளத்தில் சிங்கங்களை பார்த்தவுடன் அவசர பிரேக்கை போட்டுள்ளார்.
- பாகிஸ்தான் அணி குறித்து பேசியுள்ள அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டியன், “பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. ஆனால் அவர்கள் அதை ஒரு அணி என்று அழைப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அது ஒரு அணியே அல்ல” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
- ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் வீசிய 4 ஓவர்களில் ஒரு ரன்னை கூட விட்டுக் கொடுக்காமல், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 ஓவர்களையும் மெய்டனாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- அடுத்த டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. அந்த வகையில் அமெரிக்கா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
Chandrababu Naidu : ஒய்.எஸ்.ஆர் பெயரிலான திட்டங்களுக்கு என்.டி.ஆர்., மற்றும் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டல்
ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை புதிய அரசு மாற்றம் செய்து அரசாணை வெளியீடு ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர் பெயரிலான திட்டங்களுக்கு என்.டி.ஆர்., மற்றும் சந்திரபாபு நாயுடு பெயர் சூட்டல்
காஞ்சிபுரத்தில் கனமழை
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒலிமுகமது பேட்டை, பூக்கடை சத்திரம், ஓரிக்கை, பெரியார் நகர், பேருந்து நிலையம், தாமல், வாலாஜாபாத், பாலுசெட்டி சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை
இரிடியம் மோசடி : கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பெரோஷ்கான் உள்பட 3 பேர் கைது
இரிடியம் வாங்கித் தருவதாக கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ₹11 கோடி மோசடி செய்த புகாரில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பெரோஷ்கான் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
Rahul Gandhi Birthday : ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த செல்வபெருந்தகை
"மோடி அரசு என்பதை கூட்டணி அரசாக மாற்றி எழுதியுள்ளனர் இந்திய மக்கள்" - ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தங்கதேர் இழுத்த பிறகு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - கேரள முதலமைச்சர்
நாடு முழுவதும் நடக்கும் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்