Breaking News LIVE: சென்னையில் பலத்த காற்றுடன் மழை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 116 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி ராஜ்குமார் அகர்வால் கூறுகையில், இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, மக்கள் கூட்டம் அலைமோதியதால் நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது என்று சிக்கந்தரா ராவ் காவல் நிலைய எஸ்ஹோ ஆஷிஷ் குமார் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பேசிய எட்டா எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங், "எட்டா மருத்துவமனைக்கு இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட பல சடலங்கள் வந்துள்ளன. மேலும் காயம் அடைந்தவர் மருத்துவமனைக்கு இன்னும் வரவில்லை. உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், தரிசனம் முடிந்ததும் அனைவரும் கலைந்து செல்ல முற்பட்டனர். அப்போது, மக்கள் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என திக்குமுக்காடினர்.
இந்த பிரார்த்தனை கூட்டத்தை மானவ் மங்கள் மிலன் சத்பவ்னா சமகம் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. இதில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஆதித்யநாத், இரண்டு மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளருடன் காவல்துறை தலைமை இயக்குநரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் அலிகார் கமிஷனர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, "உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி நெஞ்சை பதற வைக்கிறது.
இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Breaking News LIVE: சென்னையில் பலத்த காற்றுடன் மழை: சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
Breaking News LIVE: சென்னையில் பலத்த காற்றுடன் மழை:
Chenai,Kancheepuram and Chengalpattu districts also will get thunderstorm
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 3, 2024
with light to moderate rain at one or two places during the next one to two hours.
Breaking News LIVE: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார் ஹேமந்த்!
Breaking News LIVE: பண மோசடி வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரினார்
நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா! முதலமைச்சர் உத்தரவு?
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவையடுத்து, நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம், கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்த நிலையில், நெல்லை மேயர் ராஜினாமா பேசு பொருளாகி உள்ளது.
Breaking News LIVE: மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் ஹேமந்த் சோரன்?
Breaking News LIVE: பண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன், மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News LIVE: திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா!
Breaking News LIVE: திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் மேயர் தரப்பினர் வழங்கினர்.