Breaking News LIVE, July 22: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவருக்கு சீமான் வாழ்த்து
Breaking News LIVE, July 22: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு - ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
- நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது
- வங்கதேசத்தில் இருந்து முதற்கட்டமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 44 மாணவர்கள் சென்னை திரும்பினர்
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக உயர்வு, மேட்டூர் அணைநீர்மட்டம் 70.8 அடியாக உயர்வு - டெல்டா பாசனத்திற்கு விரைவில் நீர் திறப்பு
- நெல்லை வழியாக இயக்கப்படும் அந்தியோதயா ரயில் வரும் 31ம் தேதி வரை ரத்து
- பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள் 665
- பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது மத்திய அரசின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்
- நீட் தேர்வு மோசடி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
- மத்தியில் பாஜக தலைமயிலான கூட்டணி அரசு நீண்டகாலம் நீடிக்காது - மம்தா பானர்ஜி
- ராஜஸ்தான் - நீட் தேர்வில் 4 ஆயிரம் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றது அம்பலம் - மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
- அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல பாஜக சதி செய்கிறது - ஆம் ஆத்மி
- அமெரிகக் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - ஜோ பைடன் அறிவிப்பு
- ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட வாய்ப்பு என எதிர்பார்ப்பு
- சீனாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
- வங்கதேசத்தில் கலவரத்திற்கு காரணமான இட ஒதுக்கீட்டை குறைத்து அந்நாட்டு அரசு அறிவிப்பு
- இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ.8.5 கோடி நிதியுதவி - ஜெய் ஷா அறிவிப்பு
- சுவிட்சர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் நடால் தோல்வி - நேர் செட்களில் வென்று சாம்பியனானார் நுனோ போர்ஜெர்ஸ்
- டிஎன்பிஎல் கிரிக்கெட் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் எளிதில் வெற்றி
Breaking News LIVE: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவருக்கு சீமான் வாழ்த்து
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின்புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி வழக்கறிஞர் ஆனந்தன் அவர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தங்கை பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
நம்முடைய தாத்தாக்கள் இரட்டைமலை சீனிவாசனார், அயோத்திதாச பண்டிதர், ‘புரட்சியாளர்’ சட்டமேதை அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் காட்டிய வழியில் பயணித்து, ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டிருக்கும் ஆதித்தமிழ்க்குடி மக்களின் உயர்வுக்கும், மேம்பாட்டிற்கும் பாடுபடவும், மறைந்த அன்பிற்குரிய தம்பி ஆம்ஸ்ட்ராங்க் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் 4 பேருக்கு போலீஸ் காவல். ஹரிஹரனுக்கு 4 நாட்கள், மற்ற மூன்று பேருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல். பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோருக்கு 2 வது முறையாக போலீஸ் காவல்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE: நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்த தானம்
சேலம் கிழக்கு மாவட்ட தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நடிகர் சூர்யாவின் 49 வது பிறந்தநாளையோட்டி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 65 பேர் ரத்த தானம் செய்தனர்.
Breaking News LIVE: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 2 நாட்கள் சிபிசிஐடி கஸ்டடி - நீதிமன்றம் உத்தரவு
எம்.ஆர்.விஜயபாஸ்கரை 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இரண்டு நாள் சிபிசிஐடி கஸ்டடி வழங்கி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் உத்தரவிட்டுள்ளார்.
சொத்து மோசடி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 3 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிபதியிடம் கடிதம் வழங்கி நிலையில் 2 நாட்கள் கஸ்டடி எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.