Breaking News LIVE, July 20: சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணி நிறைவு - ஷிவ்தாஸ் மீனா உறுதி!
Breaking News LIVE, July 20: தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
LIVE
Background
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 61 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு - நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்கவும், பர்சல் இயக்கவும் 5வது நாளாக தடை
- குரூப் 2 தேர்வுக்கு இன்று வரை அவகாசம் நீட்டிப்பு - பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை
- கனமழை காரணமாக முதுமலை யானைகள் காப்பகம் 3 நாட்கள் மூடப்படுவதாக அறிவிப்பு - துற்றுலாப்பாயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தம்
- தூத்துக்குடியில் தனியார் ஆலையில் கேஸ் வெடித்து அம்மோனியா வாயு கசிவு - மூச்சுதிணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த 20-க்கும் மேற்பட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
- நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக இன்று உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அஞ்சலை கைது
- மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்புகிறது - 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
- நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்கண்ட் மருத்துவ மாணவி கைது
- சிறுமிகளின் ஆபாச வீடியோவை பார்ப்பது குற்றமில்லை - கர்நாடகா உயர்நீதிமன்றம் கருத்து
- கன்வர் யாத்திரை தொடர்பான உத்தரபிரதேச அரசின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது - பிரியங்கா காந்தி
- மைக்ரோசாஃப்ட் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு - பிரச்னையை சீர் செய்ய முயன்றுவருவதாக சிஇஒ சத்ய நாடெல்லா தகவல்
- மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை முத்தமிட சென்ற அமெரிக்க அதிபர் பைடன் - இணையத்தில் பரவும் வீடியோ
- மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரம்
பொற்பனைக்கோட்டையில் செம்பு ஆணிகள் கண்டுபிடிப்பு
பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இரும்பு ஆணிகளே கிடைத்து வந்த நிலையில் இன்று ஐந்து செம்பு ஆணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: திருமாவுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கார்த்தி சிதம்பரம் கருத்து!
திருமாவுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? #KarthiChidambaram #Congress #Thirumavalavan #VCK #TNPolitics pic.twitter.com/PChom6GVDd
— ABP Nadu (@abpnadu) July 20, 2024
Breaking News LIVE: சிறுமியை அச்சுறுத்திய 3 தெருநாய்கள்!சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் வீதியில் தனியாக சென்ற சிறுமியை அச்சுறுத்திய 3 தெருநாய்கள்!சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு#Thirupattur #StrayDogs #ViralNews pic.twitter.com/wCerrb2F5g
— ABP Nadu (@abpnadu) July 20, 2024
Breaking News LIVE: ஆகஸ்ட் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணி நிறைவு - ஷிவ்தாஸ் மீனா உறுதி!
சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் மழைநீர் வடிகால பணிகள் நிறைவடையும் என்று தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். நிகழ்நேர வெள்ள கண்காணிப்பு மையம் எழிலகத்தில் ரூ.5.12 கோடியில் அமைக்கப்பட்ட உள்ளது. அவசரகால செயல்பாட்டு மையத்தை பார்வையிட்டப்பின் தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
Breaking News LIVE: வீலிங் சாகசம்...இளைஞருக்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணி
வீலிங் சாகசம்...இளைஞருக்கு போக்குவரத்தை சீரமைக்கும் பணிhttps://t.co/wupaoCz9iu | #Trichy #TamilNews #TNPolice pic.twitter.com/tNLupoZWEZ
— ABP Nadu (@abpnadu) July 20, 2024