Breaking News LIVE: இஸ்ரோ விஞ்ஞானி ராம் நரேன் காலமானார்
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
- நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார்
- சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றுகிறார்.
- 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதரபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு நடக்கிறது,
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- செவிலியர் சபீனாவுக்கு வீர தீர சாகசத்திற்கான கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது தமிழ்நாடு அரசு
- பிரதமர் மோடி அரசு சமூகநீதிக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது – குடியரசுத் தலைவர் முர்மு
- பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – ரசிகர்கள் அதிர்ச்சி
- பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவமனை முன்பு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி- கொல்கத்தாவில் பதற்றம்
- பயிற்சி மருத்துவர் கொலையை மூடி மறைக்க மேற்கு வங்க அரசு முயற்சி – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளியை தூக்கில் இடுவதில் உறுதி – முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்
- தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைப்பு – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
- தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள் – சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE: இஸ்ரோ விஞ்ஞானி ராம் நரேன் காலமானார்
Breaking News LIVE: இஸ்ரோ விஞ்ஞானி ராம் நரேன் காலமானார். இவர், மறைந்த குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமோடு பணியாற்றியிருக்கிறார். அக்னி வரிசை ஏவுகணையில் , மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Breaking News LIVE: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் ஆளுநருக்கு புத்தகம் பரிசளித்தார்.
சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சென்னை, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திரத் திருநாள் வரவேற்பு விழாவில் மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.#IndependenceDay2024 pic.twitter.com/NWj77iSCqz
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 15, 2024
Breaking News LIVE: 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை - வானிலை மையம்
Breaking News LIVE: 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 15, 2024
சுதந்திர இசையை ஊக்குவிக்க ரகிடா என்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தொடங்கிய சந்தோஷ் நாராயணன்
View this post on Instagram
ஹாரன் ஒலி அடித்ததால் இயக்குநர் சேரன் ஆத்திரம். நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம்
தொடர்ந்து ஹாரன் ஒலி அடித்ததால் இயக்குநர் சேரன் ஆத்திரம். நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம்! இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ₹10,000 அபராதம் விதித்தனர் போலீசார்.
பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்றும், காவல்துறையிடம் புகார் அளிக்காமல் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்து, சேரன் மீது புகார் அளித்துள்ளனர்.