Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

Background
அமேசான், பிளிப்கார்ட்டுக்குச் சொந்தமான இடங்களில் ED சோதனை
டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள இ-காமர்ஸ் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கு: நாளை ஒத்திவைப்பு
Breaking News LIVE 7th NOV 2024: கங்குவா படத்திற்கு தடைகோரிய வழக்கின் விசாரணையானது, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நவ. 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய பணத்தை நாளை தருவதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணையானது நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வெற்றி எதிரொலி; எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2 லட்சம் கோடி உயர்வு
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, டெஸ்லாவின் சொத்து மதிப்பு ரூபாய் 2 லட்சம் கோடி ஒரே நாளில் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை பெருநகர், புறநகரில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
"தமிழ்நாட்டு மக்களே பதிலடி தருவார்கள்" - உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்
"திமுகவை அழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்களே பதிலடி தருவார்கள்" - உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர்

