Breaking News LIVE 3rd NOV: சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்- விஜய்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Background
Breaking News LIVE 3rd NOV: சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்- விஜய்
சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
திமுகவில் ஸ்டாலின் அரசன்; உதயநிதி இளவரசனாக இருக்கிறார் - எடப்பாடி பழனிசாமி
உதயநிதி திமுகவிற்கு என்ன செய்துள்ளார்.
திமுகவை வளர்த்த மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு உதயநிதியை துணை முதலமைச்சராக்கி உள்ளனர். திமுகவில் சர்வாதிகாரம் நிலவுகிறது.
திமுகவில் ஸ்டாலின் அரசன்; உதயநிதி இளவரசனாக இருக்கிறார். ஸ்டாலினின் கனவு ஒரு போதும் பலிக்காது.
தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தல்
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்ற தேசிய அளவில் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் வலியுறுத்தல்
ஐ.டி நிறுவனங்களிலிருந்து அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்!
ஐ.டி நிறுவனங்களிலிருந்து அக்டோபர் மாதத்தில் மட்டும் 3,080 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்!
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (251) வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 8வது இடம் பிடித்தார் ஜடேஜா
ஆசிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (251) வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 8வது இடம் பிடித்தார் ஜடேஜா.
612 விக்கெட்டுகளுடன் முத்தையா முரளிதரன் முதல் இடத்திலும், 433 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 2வது இடத்திலும் உள்ளனர்.

