மேலும் அறிய
Breaking News LIVE OCT 2 :சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
Breaking LIVE News: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- இஸ்ரேல் மீது நள்ளிரவில் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்
- இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தல்
- இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவி எண்களை அறிவித்தது இந்தியா
- மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
- போர் நிறுத்தத்தை வலியுறுத்திய ஐ.நா. பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் கடும் கண்டனம்
- புதுச்சேரியில் பாலியல் புகாரில் காவல்துறை அலட்சியம் – மாவட்ட ஆட்சியரிடம் வேதனை தெரிவித்த குடும்ப தலைவர்
- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு – மின் உற்பத்தி பாதிப்பு
- கோவையில் மதுபோதையில் போக்குவரத்து காவலர்களை மிரட்டிய இளைஞர்கள் – தி.மு.க. எம்.பி. கனிமொழி சகோதரர் என கூறி அடாவடி
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு இன்று நடக்கிறது – மிகுந்த எதிர்பார்ப்பு
- டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை ஸ்கேன் செய்து ரசீது வழங்கும் நடைமுறை – ராமநாதபுரத்தில் அமலுக்கு வந்தது
- சித்தராமையாவுக்கு எதிரான மூடா முறைகேடு வழக்கு; சினேகமாயி கிருஷ்ணாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
- ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு
- தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
- பணம் இருந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி
21:46 PM (IST) • 02 Oct 2024
சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்- மாநாட்டில் திருமாவளவன் உரை
” சாதி, மத பெருமை பேசுபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள் “ என விசிக மது ஒழிப்பு மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
மேலும் பேசியதாவது
மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் மையில் கல். எந்த மாநாட்டிலும் இல்லாத ஒரு சிறப்பு, லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
எங்கே மழை வந்துவிடுமோ என வானத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஆனால் இயற்கையும் நம் பக்கம் தான்.
திருமாவளவன் ஏன் திடீரென மதுவிலக்கு பற்றி பேசுகிறார் என சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.
நாங்கள் சாதி, மத பெருமை பற்றி பேசி திரிபவர்கள் அல்ல, புத்தரின் கொள்கையை பேசுபவர்கள்.
இந்த மாநாட்டில் புதிதாக காந்தி மற்றும் ராஜாஜியின் கட்அவுட் வைத்திருக்கிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை.
அரசியலமைப்பு சட்டம் 47 மது ஒழிப்பு தொடர்பாக கூறுகிறது. இதனை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு வேண்டாம் என கூறிவிட்டார் என சில அரைவேக்காடுகள் ஊடகங்களில் சிலர் பேச தொடங்கிவிட்டார்கள். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
இந்த மாநாட்டை வைத்து அரசியல் பேச வேண்டாம், கூட்டணி கணக்கு போட வேண்டாம்.
20:42 PM (IST) • 02 Oct 2024
இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்: இதற்குத்தான் முதல்வர் அனுப்பி வைத்தார் - டி கே எஸ் இளங்கோவன்
மது ஒழிப்பு மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் - டி கே எஸ் இளங்கோவன்
விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று தெரிவித்த உடனே திமுக சார்பில் இருவர் கலந்து கொள்வார்கள் என்று கூறியது மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தின் காரணமாக உள்ளதாக தெரிவித்தார். மதுவினால் குடித்துவிட்டு கீழே விழுந்து கிடந்தால் மரியாதை இருக்காது சுயமரியாதை இல்லாமல் போய்விடும். இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதால்தான் மாநாட்டில் பேச எங்களை முதல்வர் அனுப்பி வைத்தார்.
தமிழ் சமுதாயம் என்பது சமத்துவ சமுதாயம் வெள்ளையர்கள் ஆட்சிக்கு பிறகு சமத்துவம் கெட்டுப் போனது
மாநாட்டில் போதை ஒழிப்பு பிரச்சாரத்திற்கு 200 கோடி நிதி ஒதுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அகில இந்திய அளவில் மது விலக்கு கொள்கை கொண்டு வர வேண்டும்
சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்றால் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளி வர வேண்டும்
மேலும், மாநாட்டின் தீர்மானங்களை வரவேற்பதாக கூறினார்.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















