Breaking News LIVE 21 Nov 2024: டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
டங்ஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படும் - வனத்துறை அமைச்சர் பொன்முடி
டங்கஸ்டன் சுரங்கத்திற்கான விண்ணப்பம் மத்திய அரசால் விண்ணப்பிக்கப்பட்டால் தமிழக அரசு அதை நிராகரிக்கும் என்று வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ படிப்புகளுக்கு வரும் 25ம் தேதி சிறப்பு கலந்தாய்வு
தமிழ்நாட்டில் காலியாக மருத்துவ படிப்புகளுக்கான இடங்களுக்கு வரும் நவம்பர் 25ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து, 57 ஆயிரத்து 160 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் விலை 7 ஆயிரத்து 145 ரூபாயை எட்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்துள்ளது.
25ம் தேதி முதல் தீவிரம் அடையப்போகும் பருவமழை
நவம்பர் 25ம் தேதி முதல் பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

