Breaking News LIVE: நாளை, 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
LIVE
Background
- வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்பதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
- சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை – சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
- கனமழை அபாயம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர்
- மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் – தொண்டர்களுக்கு தி.மு.க. உத்தரவு
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, சாலைகளிலும் வெள்ளம்போல தேங்கிய மழைநீர் – மக்கள் பெரும் அவதி
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
- நான்கு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் – புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு; முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு குறைக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைப்பு
- 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது
- தொழில்நுட்ப தேர்வுகளுக்கான போட்டித் தேர்வு இன்று தொடங்குகிறது – 554 பணிகளுக்கு 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாளை மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம்
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
- பாபா சித்திக் கொலைக்கு ஏக்நாத் ஷிண்டே அரசுதான் பொறுப்பேற்பு – ராகுல்காந்தி
- ஹரியானா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிர ஆலோசனை
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க நடவடிக்கை – அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்த பின் உத்தரவாதம்
- தொடர் விடுமுறை முடிந்து நேற்று முதல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பிய வெளியூர்வாசிகள்
- இந்தியா – அல்ஜீரியா இடையேயான நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் புதிய ஏவுகணை சோதனை மையம் அமைக்க திட்டம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!
சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளை லாரிகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
ஈரோடு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் கனமழை
ஈரோடு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாநகரின் கருங்கல்பாளையம், பன்னீர் செல்வம் பூங்கா, மூலப்பாளையம், திண்டல், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
₹50,000 செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ₹1,000 அபராதத்தை கட்டிடலாம் சார்"
"₹50,000 செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ₹1,000 அபராதத்தை கட்டிடலாம் சார்" :
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். வெள்ளத்தில் இருந்து கார்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை என கார் உரிமையாளர்கள் தங்களின் அச்சத்தை, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்
போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (15.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.