மேலும் அறிய
Breaking News LIVE, AUG 14: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு மறுப்பு - உச்சநீதிமன்றம்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் செய்திகள்
Source : twitter
Background
- நாளை நாட்டின் 78வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாரான மக்கள்
- மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் – ஒரு தரப்பு அறிவிப்பு
- ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் – இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு
- தமிழ்நாட்டில் ரூபாய் 44 ஆயிரத்து 125 கோடிக்கான 15 முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
- தமிழ்நாட்டில் புதியதாக முதலீடு செய்யப்பட்டுள்ள 15 முதலீடுகள் மூலமாக 24 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
- சுதந்திர தின கொண்டாட்டம்; ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு – தி.மு.க. கூட்டணி கட்சிகள்
- திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரழப்பா? தமிழகம் முழுவதும் குளிர்பான ஆலையில் அதிகாரிகள் ஆய்வு
- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் – கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை
- தமிழ்நாட்டில் துணைவேந்தர் இல்லாமல் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதால் கல்வியாளர்கள் வேதனை
- செபி தலைவர் மாதவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
- சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்
- டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை
18:33 PM (IST) • 14 Aug 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
17:35 PM (IST) • 14 Aug 2024
அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது .
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















