Breaking News LIVE: ஆந்திராவில் இலவச புடவை வாங்கச் சென்ற 2 பெண்கள் கூட்ட நெரிசலில் பலி..!
Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
விமான நிலையம் அருகே வெடிவிபத்து - 10 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பில், குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இலவச புடவை வாங்கச் சென்ற 2 பெண்கள் பலி..!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இலவச புடவைகளை வாங்கச் சென்ற பெண்களில் 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!
இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
NewYearCelebration: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பலி..!
உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Maharashtra, Nashik: வெடி விபத்தை தொடர்ந்து தீ விபத்து..!
மகாராஸ்ட்ரா மாநிலத்தில் நாசிக்கில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

