Breaking Live: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
LIVE
Background
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
ப.சிதம்பரத்தின் சென்னை இல்லத்தில் சிபிஐ சோதனை நிறைவு பெற்றது
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.
நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு
கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயர்கல்விக்கு தற்போதைய திமுக அரசு பொற்காலமாக இருக்கும் - முதலமைச்சர் முக ஸ்டாலின்
உயர்கல்விக்கு தற்போதைய திமுக அரசு பொற்காலமாக இருக்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.