
Breaking LIVE : இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் வெற்றி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
LIVE

Background
இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் வெற்றி - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
பாரதமாதா ஆலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது
தருமபுரி அருகே, பாரதமாதா ஆலயத்தில், பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஏற்கனவே பாஜக பிரமுகவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
'செருப்பு அப்படியேதான் இருக்கு..வேணும்னா வந்து வாங்கிக்கலாம்' அமைச்சர் பிடிஆர் ட்வீட்
நேற்று தூக்கி எறியப்பட்ட காலணியை வேண்டுமென்றால் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க. ஒருபோது நியாயப்படுத்தாது - அண்ணாமலை
தமிழ்நாடு நிதியமைச்சர் பி..டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சென்ற மீது காலணி தாக்குதலை பா.ஜ.க. ஒருபோது நியாயப்படுத்தாது என்றும் வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை கிளம்பினார் பி.டி.ஆர்
மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் கடும் பாதுகாப்புடன் விமானம் மூலம் சென்னை கிளம்பினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

