Breaking Live : தேர்தல் அதிகாரிக்கு ஒபிஎஸ் கடிதம்
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில், இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் அறிகுறி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி காணப்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் குரங்கு அம்மை பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து கேரளா - தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அமைச்சர் விளக்கம்:
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது தமிழ்நாட்டில், இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.
கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு
கனியாமூர் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு
கனியாமூர் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரிக்கு ஒபிஎஸ் கடிதம்
அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு பதில் கடிதம். தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் கடிதம்.
ஐசிஎப் போலீசார் மீது கொலைவழக்கு பதிய உத்தரவு
விசாரணை கைதி நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் போலீசார் மீது கொலை வழக்கு பதிய ஐகோர்ட் ஆணை.
அதிகாரிகள் உதவி இல்லாமல் ஆக்கிரமிப்பு நடைபெறாது : நீதிபதி
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடைபெறாது. நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகளில் ஆக்கிரமிப்புகள் தமிழகத்தின் சூழலியலை பாதிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு