Breaking Live : கள்ளக்குறிச்சி கலவரம் - அறிக்கை தாக்கல்
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
செஸ் போட்டிகளிலேயே மிகவும் கவுரவமிக்க தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட் ஆகும். நீண்ட பாரம்பரியமிக்க இந்த தொடரின் 44வது செஸ் ஒலிம்பியாட் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.செஸ் வீரர்களின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு எதற்காக தம்பி மாஸ்காட் தேர்வு செய்யப்பட்டது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதில்,”தம்பி என்பது சகோதரத்துவத்தின் அடையாளம். எங்களுடைய தலைவர் பேரிறஞர் அண்ணா அனைவரையு பாசமாக தம்பி என்று அழைப்பார். அவரை நினைவு கூரும் விதகமாகவும் சகோதரத்துவத்தை நினைவு கூரும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு தம்பி மாஸ்காட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்துள்ளது இந்தியாவிற்கு மிகவும் பெருமையான தருணம். நான் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் என்ற சார்பில் வரவேற்கிறேன்.
நம்முடைய பிரதமர் மோடி செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குஜராத் முதலமைச்சராக இருந்த போது செஸ் விளையாட்டு போட்டியை அங்கு நடத்தினார். அத்துடன் புடான் அரச குடும்பம் இந்தியாவிற்கு வந்த போது பிரதமர் மோடி அவர்களுக்கு செஸ் செட்டை வழங்கினார்.
இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் சூழல் உருவாகும் பட்சத்தில் அதை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்று நான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்பின்னர் மார்ச் 16ஆம் தேதி இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இதற்காக நான் 18 குழுக்களை நியமித்தேன். அதன்பின்னர் 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம்.
இந்தியாவிலுள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இந்தியாவின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களின் 36 சதவிகிதம் தமிழ்நாடு வைத்துள்ளது. ஆகவே இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி
செஸ் ஒலிம்பியாட் - ஓபன் பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி
விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கியதாக மகா காந்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை சிறப்பு அமர்வே விசாரிக்க கோரும் மனுவில் உத்தரவு பிறப்பிப்பதாக கூறி நீதிபதிகள்
தள்ளிவைத்தனர். எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் நீதிபதிகள்.
63 யூடியூப் தளங்களை முடக்க நடவடிக்கை - காவல்துறை
இரு வாரங்களில் நிலைமை சரிசெய்யப்படும். 63 யூடியூப் தளங்களை முடக்க நடவடிக்கை - காவல்துறை
கள்ளக்குறிச்சி கலவரம் - அறிக்கை தாக்கல்
கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும் - நீதிபதி