Ahmedabad Plane Crash: குஜராத்தில் பயங்கரம்... விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. 242 பயணிகளின் நிலை என்ன?
Air India Plane Crash: சுமார் 200-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானமானது புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

குஜராத்தின் அகமதாப்பாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானது.. விமானம் விபத்துக்குள்ளான இடம் ஒரு குடியிருப்பு பகுதி என்று நம்பப்படுகிறது. அந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. விபத்து குறித்த முழு தகவல் இன்னும் வெளிவரவில்லை.
ஏர் இந்திய விமானம் விபத்து:
அகமதாபாத் சர்தார் வல்லப்பாய் பட்டேல் விமான நிலையத்தில் ஏர் இந்திய விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.17 மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் போயிங் 787 ரக விமானமானது புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானமானது கட்டுப்பாட்டை இழந்து மேகனி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது.
Some of the pics of the horrific Ahmedabad crash being shared on social media.
— Man Aman Singh Chhina (@manaman_chhina) June 12, 2025
Prayers for all onboard. pic.twitter.com/JtN3qOKqxC
பயணிகள் நிலை என்ன?
ANI செய்தி நிறுவனத்தின்படி, விமானத்தில் 242 பயணிகள் இருந்திருக்கலாம். விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் விமானம் மோதியதாக நம்பப்படுகிறது. விமானம் மேலே எழும்பும் போது 825 உயரத்தில் எழும்பிய போது கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் 230 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது. காயமடைந்தவர் சிலரை மீட்பு படையினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on https://t.co/Fnw0ywg2Zt and on our X handle (https://t.co/Id1XFe9SfL).
— Air India (@airindia) June 12, 2025
-Air India…
மேலும் விமான விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் அதிகாரிகள் தற்போது விபத்துக்கான விசாரணையை தொடங்கியுள்ளனர்,
விமானம் வெடித்து சிதறும் காட்சி:
இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து சிறிது நேரத்தில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழும் காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது.
Air India Dreamliner crash flight AI171
— Flight Emergency (@FlightEmergency) June 12, 2025
A sad day for aviation @AirNavRadar
pic.twitter.com/BbXF7kavPt
விமானமானது குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.






















