கண்டெடுக்கப்பட்ட படகு...உள்ளே பயங்கர ஆயுதங்கள்...மகாராஷ்டிராவில் பகீர்
மகாராஷ்டிரா ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா ராய்காட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராய்கட் ஹரிஹரேஷ்வர் கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட படகில் ஆயுதங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். அதில், சில முக்கிய ஆவணங்கள் அதில் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2 suspicious boats found on the seashore of #Raigad district of Maharashtra, AK-47 and some bullets found from the boat. pic.twitter.com/YCKQL81iwx
— Nikhil Choudhary (@NikhilCh_) August 18, 2022
இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். படகு கண்டுபிடிக்கப்பட்ட இடம் மும்பையில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவிலும், புனேவில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இதற்கும் பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
High alert in #Raigad district.
— Utkarsh Singh (@utkarshs88) August 18, 2022
Suspicious boat on the beach of Harihareshwar... Information about weapon found in boat... Raigad District Police Force reached the spot... Blockade across the district. #Maharashtra pic.twitter.com/shRTCYECsr
75ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை தொடர்ந்து, ஆயுதங்களுடன் படகு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படகில் கிடைத்துள்ள ஆயுதங்கள் கடத்தப்பட்டவையா அல்லது அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Maharashtra | As per primary info, some boats containing weapons & documents found in Harihareshwar & Bharadkhol of Shrivardhan in Raigad. Local Police is probing, I've demanded CM-Dy CM to urgently appoint spl team of ATS or State Agency: Aditi Tatkare, Shrivardhan (Raigad) MLA pic.twitter.com/ndl9LSP5Zj
— ANI (@ANI) August 18, 2022
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், ஆயுதங்களுடன் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்