ஜம்மு-காஷ்மீர்: பேருந்தில் குண்டு வெடிப்பு… தொடர் சம்பவங்களால் பரபரப்பான உதம்பூர் பகுதி! பாதுகாப்பு தீவிரம்!
அமித் ஷா வருகைக்காக முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிகளுக்கு ஒரு நாள் முன்னர் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதால் காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இரவு குண்டு வெடித்து சில மணி நேரங்களுக்குள் இரண்டாவது முறையாக வெடித்ததால் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு சூழ்நிலை நிலவியுள்ளது.
மீண்டும் குண்டு வெடிப்பு
அதிகாலையில் பெரிய சத்தம் கேட்டதால் பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பிய ஏஜென்சிக்கள் பேருந்து வெடித்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பேருந்தின் மேற்கூரை மற்றும் பின்புறம் பறந்து சென்றுள்ளது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு செல்ல இருக்கும் நேரத்தில் இது போன்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அமித் ஷா பயணம்
அமித் ஷா செப்டம்பர் 30 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்வார் என்றும், அக்டோபர் 1 ஆம் தேதி ரஜோரி மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி பாரமுல்லாவில் பொதுக் கூட்டங்களை நடத்துவார் என்றும் முன்பு கூறப்பட்டது. ஆனால் பின்னர் வருகை தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது. முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிகளுக்கு ஒரு நாள் முன்னர் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதால் காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்: பவர் தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க...ஊடகத்தினரை எச்சரிக்கும் TTF வாசன்
நேற்றிரவு வெடித்த பேருந்து
இதே போல நேற்று (புதன்கிழமை) இரவு, டோமெயில் சௌக்கில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த யாருமில்லா பேருந்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. அதில் இரண்டு பேர் காயமடைந்தனர், அந்த இடத்தில் தினமும் பேருந்து நிறுத்தப்படும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவதாக தற்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்த பேருந்து, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள பசந்த்கரில் இருந்து வந்து பேருந்து நிலையத்தில் இரவு நிறுத்தப்பட்ட பேருந்தாகும். காலையில் பசந்த்கருக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | J&K: Investigation underway by Army Bomb Disposal Squad & dog squad at the bus stand in Udhampur.
— ANI (@ANI) September 29, 2022
Two blasts occurred within 8 hours in Udhampur; two people got injured in the first blast and are now out of danger, no injury in 2nd blast, says DIG Udhampur-Reasi Range pic.twitter.com/DuCnMngqZq
கடுமையான பாதுகாப்பு
இந்த குண்டுவெடிப்பில் இரண்டு முதல் மூன்று பேருந்துகள் சேதமடைந்துள்ளதாக உதம்பூர்-ரியாசி ரேஞ்ச் டிஐஜி சுலேமான் சவுத்ரி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "வெடிப்பொருட்களின் தன்மை மற்றும் பிற விஷயங்கள் விசாரணையில் உள்ளன. அதற்கு விரிவான விசாரணை தேவை. காயமடைந்தவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாமா என்ற கோணத்த்தில் இருந்தும் விசாரணை நடத்தப்படுகிறது", என்று கூறினார். மேலும் அந்த பகுதி மக்களுக்கு காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என மக்கள் தங்கள் வாகனங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் பேருந்து நிலையத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். அனைத்து வாகனங்களும் புறப்படும் முன் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. காலையில் குண்டுவெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அனைத்து வாகனங்களும் சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.