Bihar Blast: அதிர்ச்சி.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு
நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
பீகாரில் நாளாந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
Bihar | A bomb was hurled near Bihar Chief Minister Nitish Kumar's 'Jansabha' site in Nalanda. More details awaited.
— ANI (@ANI) April 12, 2022
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பான ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
#UPDATE | Police detained one person in connection with a bomb that was hurled near Chief Minister Nitish Kumar's 'Jansabha' site in Nalanda.
— ANI (@ANI) April 12, 2022
இச்சம்பவத்தால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிற முக்கியச் செய்திகள்:
#BREAKING | 2 அரசு கல்லூரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயர்.!
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு உத்தரவு.#pudukkottai #karunanidhi #kalaignarkarunanidhi #TNGovt pic.twitter.com/NjblmdMGPe
ஒரே நேரத்தில் இரண்டு டிகிரிகளைப் படிக்கலாம்: யுஜிசி அதிரடி https://t.co/wupaoCQKa2 | #UGC #Degree pic.twitter.com/Aikw6YLofL
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்