Watch Video : அடுப்பின் அருகில் இருந்த டீசல் கேன்கள்.. வெடித்துச் சிதறிய படகு.. 5 பேர் தீயில் கருகி மரணம்..!
பீகாரின் பாட்னாவில் படகில் சமைத்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. பாட்னாவில் அமைந்துள்ள ராம்பூர் தியாரா. இங்கு சோன் என்ற நதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த நதி வழியே படகுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படகில் ஊழியர்கள் சிலர் இருந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கான உணவை படகில் உள்ள சிலிண்டர் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த அடுப்பின் அருகிலே டீசல் கேன்களும் இருந்துள்ளது.
Bihar | Five labourers died when a fire broke out in their boat at Rampur Diyara ghat in Patna.
— ANI (@ANI) August 6, 2022
Police say, "It's being said there was a cylinder explosion, but that's not the case. They were cooking near few diesel canisters, so a fire broke out. They are yet to be identified" pic.twitter.com/Ot4O8IOx9W
அப்போது, எதிர்பாராதவிதமாக அடுப்பின் நெருப்பு அருகில் இருந்த டீசல் கேன்கள் மீது விழுந்துள்ளது. இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் டீசல் கேன் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், படகு முழுவதும் தீ மளமளவென பரவியது.
4 killed & several injured when an LPG cylinder exploded on a motor boat in Sone river near Maner area of Patna on Saturday. The occupants (labour) of the boat were cooking food when blast happened.#Bihar pic.twitter.com/eEVzwnHOqy
— Arvind Chauhan (Silly Soul | मूर्ख आत्मा) (@Arv_Ind_Chauhan) August 6, 2022
இந்த எதிர்பாராத தீ விபத்தில் படகில் இருந்த 5 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சென்றனர். படகு தீ பற்றி எரிந்ததையடுத்து, அந்த பகுதி முழுவதும் மக்கள் கூடினர். உடனடியாக, தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயில் சிக்கி உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்