Bihar Election 2025 Result LIVE: படுதோல்வியை நோக்கி காங்கிரஸ் கூட்டணி! 200 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை..
Bihar Election 2025 Result LIVE Updates: 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
LIVE

Background
Bihar Election 2025 Result LIVE Updates:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) நடைபெறுகிறது. 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி மற்றும் நவம்பர் 11ம் தேதி என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் முதலமைச்சரான நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் - பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பீகாரின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிதிஷ் குமாரும், இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இருவரும் வாக்குறுதிகளை தங்களது பிரச்சாரங்களின்போது அள்ளி வீசியுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வழக்கத்தை விட அதிகளவு வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 67.14% வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bihar Election 2025 Result LIVE: வெற்றியை நோக்கி தேஜஸ்வி?
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் இழுப்பறிக்கு மத்தியில் 13,880 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இன்னும் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை மட்டுமே உள்ள நிலையில் தேஜஸ்வியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாகியுள்ளது.
Bihar Election 2025 Result LIVE: மீண்டும் முன்னிலை பெறும் தேஜஸ்வி..
பீகார் தேர்தலில் ரகோப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை வகிக்கிறார்.





















