Rahul Gandhi yatra Day 4: தமிழ்நாட்டில் கடைசி நாள்! பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி.. அடுத்து கேரளா!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இன்று கடைசி நாள் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3570 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதை கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக ராகுல் காந்தி கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் பாத யாத்திரை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் கடைசி நாள் யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இவர் இன்று காலை 7 மணி முதல் முளகுமூடு என்ற பகுதியில் இருந்து யாத்திரையை தொடங்கியுள்ளார். மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள நேசமணி கல்லூரியில் காலை பாதயாத்திரையை முடிக்க உள்ளார். அதன்பின்னர் இன்று மாலை தமிழ்நாட்டிலிருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்ல உள்ளார். நாளை முதல் கேரளாவில் தங்கி தன்னுடைய பாத யாத்திரையை தொடங்க உள்ளார்.
Live: Shri @RahulGandhi begins Day 4 of #BharatJodoYatra from Mulagumoodu in Kanyakumari. https://t.co/c2mr0z3pHu
— Congress (@INCIndia) September 10, 2022
தினமும் 25 கிலோ மீட்டர்.. 150 நாள் பாத யாத்திரை:
ராகுல் காந்தி தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொள்கிறார். தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் அவர் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நாளை ராகுல் காந்தி கேரளா மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். அங்கு 18 நாட்கள் தங்கி பாதயாத்திரை செல்கிறார். அதன்பின்னர் கர்நாடகா மாநிலம் சென்று 21 நாட்கள் பாத யாத்திரையை தொடர்கிறார். இதைத் தொடர்ந்து ஆந்திரா, வட மாநிலங்களுக்கு இவர் யாத்திரை பயணத்தை தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தி சுமார் 1 கோடி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் சுமார் 1 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
LIVE: Bharat Jodo Yatra | Media Interaction | Tamil Nadu https://t.co/Yef6dJh1DG
— Rahul Gandhi (@RahulGandhi) September 9, 2022
மத்திய பாஜக அரசின் தவறான அரசியல், சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாகவும் விலைவாசி ஏற்றம், பொருளாதார சீர்கேடு ஆகியவற்றை விளக்கி கூறும் விதமாகவும் நாடு முழுவதும் ராகுல் காந்தி பாதயாத்திரை திட்டமிட்டார்.அந்த வகையில் இந்த மாபெரும் பாத யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடந்த 7ஆம் தேதி தொடங்கினார்.
மேலும் படிக்க: அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? ராகுல் காந்தியின் பளீச் பதில்