Bhagat Singh Birthday: "தூக்கிலிட வேண்டாம், சுட்டுக் கொல்லுங்கள்" : 23 வயது தீரன் பகத்சிங் பிறந்த தினம்..
இன்றும் என்றும் மறக்கப்படாத 23 வயதில் நாட்டுக்காக உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞ்னை பற்றி தெரிந்து கொள்வோம்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத மற்றும் மறக்கக்கூடாத 23 வயது இளைஞரான பகத்சிங் பிறந்த தினம் இன்று செப்டம்பர் 28. 23 ஆண்டுகளே வாழ்ந்த வீரனை இன்றும் போற்றுகிறோம் என்றால். நாட்டிற்கு என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்வோம்.
பகத்சிங் பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் என்ற கிராமத்தில் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பிறந்தார். இவரின் பிறந்த தினத்தில்தான், இவரின் தாய்மாமன்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக சிறை சென்று திரும்பியிருந்தனர். இவரின் தாத்தா, பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்-ன் படைவீரர்களாக பதவி வகித்தார். வீர பாரம்பரியமாக இருந்த குடும்பத்தை பார்த்து வளர்ந்த இவருக்கும் போர்க்குணம் தொற்றிக் கொண்டது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919 ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கொல்லப்பட்டனர். இதை கண்ட பகத்சிங், ஆங்கிலேயரின் கோர முகத்தை அறிந்து கொண்டார். அந்நியராக வந்தவர்கள், தமது நாட்டு மக்களை கொன்று குவிப்பதை கண்டு, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று வேட்கை கொள்கிறார். அப்போது பகத் சிங்கிற்கு பன்னிரண்டு வயது.
படம்: ஜாலியன் வாலாபாக் படுகொலை
1923 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் கல்வி பயின்றார். அங்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றார். 1927ஆம் ஆண்டில் பகத்சிங்கிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் நினைத்தனர். ஆனால் பகத்சிங் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு சென்றார். அக்கடிதத்தில் எனது வாழ்க்கையை நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிக்க போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
லாலா லஜபதி ராயின் கொள்கைகளில் ஈர்ப்பு:
பின்னாளில் பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படக் கூடிய லாலா லஜபதி ராயின் கொள்கைகளால் பெரிது கவரப்பட்ட பகத்சிங், விடுதலை போராட்டத்தில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இளைஞர்களுடன் சேர்ந்து பல்வேறு இயக்கங்களை ஆரம்பித்து ஆங்கிலேயருக்கு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தார். இவரின் போராட்டம், இளைஞர்களை பெரிதும் கவர்ந்ததை கண்டு ஆங்கிலேயர்கள் பெரிதும் கோபம் கொண்டிருந்தனர்.
ஆங்கிலேயர்களின் நடவடிக்கைகள் மற்றும் சட்டங்கள், இந்தியர்களை ஒடுக்குவதை கண்டித்து, லாகூர் வந்த ஆங்கிலேயரை கண்டித்து, 1928 ஆம் ஆண்டு லாலா லஜிபதி ராய் அமைதி பேரணி மேற்கொண்டார். இதை கண்ட ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் போராட்டத்தை கலைக்க நினைத்தனர். அப்போது ஸ்காட் என்ற ஆங்கில காவல்துறை அதிகாரி லாலா லஜபதி ராயை சுட்டு கொன்று விட்டார்.
கைது
இச்சம்பவத்தை அறிந்து கொதித்து எழுந்து பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களான ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர், ஆங்கிலேயர்களை பழிவாங்க துடித்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்காட் என்பவரை சுடுவதற்கு பதிலாக சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக மூவரும் கைது செய்யப்பட்டனர்.
படம்: சுக்தேவ், பகத்சிங், ராஜ்குரு
கடைசி ஆசை:
அப்போது தப்பித்துச் சென்ற பகதசிங் ஆங்கிலேயருக்கு செயல்பட்டு ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தார். பின்னர் மீண்டும் கைது நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்பட்டார். பகத் சிங்கிடம், உன் கடைசி ஆசை என்ன என்று ஆங்கிலேய நீதிபதி கேட்டார். அப்போது நீதிபதியிடம் தூக்கிலிட வேண்டாம் என்றார், அதற்கு நீதிபதி பயமாக இருக்கிறது என்று கேட்க, பயம் இருந்தால், நான் ஏன் இங்கு இருக்கப் போகிறேன், சாகும் போதும் என் நாட்டை தொட்டு கொண்டே சாக வேண்டும். அதனால் என்னை சுட்டுக் கொல்லுங்கள் என்று பகத் சிங் தெரிவித்தார். இப்படியொரு நாட்டுப்பற்று மிக்க பகத்சிங்கை கண்டு அனைவரும் அரண்டு விட்டனர்.
நான் ஏன் நாத்திகன் ஆனேன்?
1931 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவரது நண்பர்களான சுக்தேவ், ராஜ்குரு குரு உள்ளிட்டோரும் தூக்கிலிடப்பட்டனர்.
அப்போது, பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்று குறிப்பிட்டிருந்தார். பின் நாட்களில் அவரது கடிதங்கள் புத்தகங்களாக வெளிவந்தது. இப்புத்தகத்தில் கடவுள் கொள்கையை மறுக்க காரணம், போர்க்குணம் கொண்ட சுதந்திர போராட்டம் உள்ளிட்டவைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சுயநலம் கருதாது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்து கொண்ட இளைஞனை நாடு என்றும் மறக்காது, மறக்கவும் முடியாது.