Tamilnadu MP : மாநிலங்களவையில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டு எம்.பி யார்..?
ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள், 2022ஆண்டில் தமிழ் நாடு எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும், கடந்தாண்டு மாநிலங்களவையில் எந்த அளவுக்கு செயல்பட்டனர் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா அரசியலமைப்பின் படி நாட்டில் இரு அவை முறையே நடைமுறையில் உள்ளது. அதாவது, நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. அவை, மக்களவை மற்றும் மாநிலங்களவையாகும். மக்களவை போல மாநிலங்களவையை கலைக்க முடியாது.
மாநிலங்களவை இடங்களை பொறுத்தவரை, உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக இடங்களை கொண்ட மாநிலமாகும்.
மொத்தம், 18 மாநிலங்களவை உறுப்பினர்கள், தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள், தங்களுடைய ஆறு ஆண்டு கால பதவி காலம் முடிந்தபின் சுழற்சி முறையில் ஓய்வு பெறுவார்கள்.
இந்த 18 உறுப்பினர்களில், ஆறு உறுப்பினர்கள், 2022ஆண்டில் தமிழ் நாடு எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும், கடந்தாண்டு மாநிலங்களவையில் எந்த அளவுக்கு செயல்பட்டனர் என்பது குறித்து பார்க்கலாம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில், அவையில் அவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தங்கள் தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கபடும். விவாதங்கள், தனியார் மசோதா மற்றும் கேள்விகள் மூலம் தங்கள் வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளலாம்.
பூஜ்ய நேரம் எனப்படும் (Zero Hour) நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பிரசனைகள் குறித்து அவையில் நேரடியாக பேசலாம்.
தாங்களே தயாரித்து பேசுவதை Initiated debates என்பார்கள். பிறர் பேசியதை வழிமொழிந்தால் அதை Associated Debates என்பர். ஒவ்வொரு கூட்டத்தொடர் முடிந்ததும், பி.ஆர்.எஸ் இந்தியா என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் அளித்த தரவுகளின்படி, மாநிலங்களவை உறுப்பினர்கள் செயல்பட்ட விதம் குறித்து மதிப்பிடப்பட்டு அவர்கள் பட்டியலிடப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டு எம்பி யார்?
கடந்த 2022 ஆம் ஆண்டில், மாநிலங்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்களில், திமுகவை சேர்ந்த கனிமொழி என்.வி.என். சோமு 136 புள்ளிகளுடன் (விவாதங்களில் கலந்து கொண்டது + தனியார் மசோதாக்கள் தாக்கல் செய்தது + கேள்விகள் எழுப்பியது) முதல் இடம் பிடித்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு எம்.பிக்களில் மாநிலங்களவையில் 125 கேள்விகள் எழுப்பி கேள்விகள் பிரிவிலும் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 77 சதவிகித அமார்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை 36 விவாதங்களில் பங்கேற்று இந்த பிரிவில் முதலிடம் வகிக்கிறார். திமுகவை சேர்ந்த வில்சன் 3 தனியார் மாசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.
ஆறு ஆண்டு காலம் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு 2022ம் ஆண்டில் ஒய்வு பெற்றவர்கள் எப்படி செயல்பட்டுள்ளார்கள் என்பதை பார்க்கலாம். அதிமுகவைச் சேர்ந்த விஜயகுமர் ஆறு ஆண்டு காலத்தில் 514 புள்ளிகள் பெற்று (விவாதங்கள் + தயார் மசோதாக்கள் + கேள்விகள்) ஒய்வு பெற்ற தமிழ்நாட்டு எம்பிக்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் 84 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.