4 வயது மகளை 4வது மாடியிலிருந்து தூக்கி எறிந்த கொடூர தாய்..! மனதை உலுக்கும் சம்பவம்
பெங்களூரில் குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து ஒரு பெண் தனது நான்கு வயது பெண் குழந்தையை தூக்கி எறிவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
பெங்களூரில் குடியிருப்பு வளாகத்தின் நான்காவது மாடியின் பால்கனியில் இருந்து ஒரு பெண் தனது நான்கு வயது பெண் குழந்தையை தூக்கி எறிவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வெளியாகியுள்ள இந்த காட்சி, காண்போரை பதற வைத்துள்ளது.
மாடியிலிருந்து குழந்தையை கீழே எறிந்த பிறகு, அந்த பெண்ணும் மாடியின் கம்பி மீது ஏறி கீழே குதிக்கு முயற்சித்தார். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் விரைந்து வந்து, அவரை பின்னால் இழுத்து தரையில் தள்ளினர்.
குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். வடக்கு பெங்களூரு எஸ்ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வியாழக்கிழமை இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நான்கு வயது பெண் குழந்தைக்கு செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பெண் மன உளைச்சலில் இருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அவரது கணவர் போலீசில் வழக்கு பதிவு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை கொலை செய்த பெண் ஒரு பல் மருத்துவர். அவரது கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர். தாயின் மனநலம் குறித்தும் அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம் என்று மூத்த போலீஸ் அலுவலர் ஸ்ரீனிவாஸ் கவுடா தெரிவித்துள்ளார்.
மாற்று திறனாளி குழந்தைகள், இந்த போட்டி மிகு உலகில் தங்களின் திறமையின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக வாழும் சூழலில், இதுபோன்ற சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது. ஒரு காலத்தில் பெண் சிசு கொலை தலைவிரித்தாடிய நிலையில், தற்போது இதுபோன்ற சம்பவம் நமக்குள்ளே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தாலும், ஒவ்வொரு தனி மனிதனும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் செயலால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
சமீபத்தில், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த அசுராதி பிரான்ஸ் வீட்டில், குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாதாள அறையில் இருந்த ஐஸ் பெட்டியில், அசுராதி பிரான்சின் 3 வயது குழந்தை சேஸ் ஆலன், உறைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அசுராதி பிரான்சிஸ் போலீசாரால் கைது செய்துப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்