Bengaluru Weather: பெங்களூருவை உலுக்கிய கனமழை! தத்தளித்த சாலைகள்.. சிறுமி உட்பட 10 பேர் பலியான சோகம்..
கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கடும் வெயிலுக்குப் பின், திடீரென மாறிய வானிலையால் நகரின் பல்வேறு இடங்கள் மழை நீர் தேங்கியது

பெங்களூருவில் நேற்று(29-04-2026) மாலை பெய்த ஆலங்கட்டிகளுடன் பெய்த கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்றுக்கு 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கடும் வெயிலுக்குப் பின், திடீரென மாறிய வானிலையால் நகரின் பல்வேறு இடங்கள் மழை நீர் தேங்கியது
பேய் மழை - 7 பேர் பலி
பெங்களூருவின் முக்கியப் பகுதியான பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயமடைந்த பலருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுமியும் ஒருவர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் வெளியே வந்த அந்தச் சிறுமி, இயற்கைச் சீற்றத்திற்குப் பலியாகியுள்ளார்.
A tragic incident was reported in Bengaluru after a wall collapsed near Bowring Hospital following continuous heavy rainfall in the city.
— Hate Detector 🔍 (@HateDetectors) April 29, 2026
The collapse caused panic in the area and led to multiple casualties.
Initial reports suggested injuries and possible loss of lives. As… pic.twitter.com/W1zyqkY8me
வேறோடு சாய்ந்த மரங்கள்:
மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்தும், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தும் நகரின் பெரும்பகுதி இருளில் மூழ்கியது. சுவர் இடிந்து விழுந்தது மட்டுமின்றி, மின்சாரம் தாக்கியும் சிலர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய மக்கள், வெள்ளம் மற்றும் விழுந்த மரங்களால் சாலைகளில் பல மணிநேரம் தவித்தனர்.
சொதப்பிய மழை நீர் வடிகால்கள்:
வெறும் ஒரு சில மணிநேர மழையிலேயே பெங்களூருவின் வடிகால் அமைப்புகள் நிலைகுலைந்து போயின. வணிக வளாகங்கள் முதல் குடியிருப்புப் பகுதிகள் வரை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. மீட்புப் படையினர் விடிய விடிய மரங்களை அகற்றும் பணியிலும், மின்சாரத்தைச் சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வானிலை மையம் எச்சரிக்கை:
அதிகப்படியான வெப்பம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இந்தத் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் பலத்த காற்றுடன் மழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், மின் கம்பங்கள் அருகே நிற்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























