Crypto Payment: பெங்களூருவின் சாலையோரக் டீ கடையில் கிரிப்டோ கரன்சிகள்; அசத்தும் இளைஞர்
பெங்களூருவின் சாலையோரக் டீ கடையில் கிரிப்டோ கரன்சிகள்யும் பரிவர்த்தணைக்காக வைத்து இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.
சாலையோர டீ கடையில் கிரிப்டோ கரன்சிகளையும் ஏற்றுக் கொள்வதன் மூலம், இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
கர்நாடக மாநிலத்தின் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில், இளைஞர் ஒருவர் சாலை ஓரத்தில் டீ கடையொன்றை நடத்தி வருகிறார். "Frustrated dropout" என்ற பெயரில் கடையை நடத்தி வரும் இளைஞர் ஒருவர், தமது கடையில் கிரிப்டோ கரன்சிகளையும் பணபரிவர்த்தணைக்கு ஏற்றுக்கொள்கிறார்.
கிரிப்டோ கரன்சிகள்:
டீ குடிப்பதற்கு, பண பரிமாற்றத்திற்கு கிரிப்டோ கரன்சிகள் ஏற்றுக் கொள்ளப்படும் என போர்டு வைத்திருப்பதை பார்த்து, பெங்களூருவில் அனைவரும் ஆச்சரியம் கொண்டு வருகின்றனர். பலரும் அவரது கடையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .
Just Bangalore things 😌#crypto #NammaBengaluru pic.twitter.com/L8q0JIO7py
— Akshay Saini (@akshaymarch7) September 28, 2022
இந்த கடை குறித்து வெளியான தகவலின்படி, கிரிப்டோவை ஏற்றுக்கொள்ளும் டீ கடை உரிமையாளரின் பெயர் சுபம் சைனி என்பவர் என கூறப்படுகிறது. அவர் தனது டீ கடையை பெங்களூருவில் உள்ள மாரத்தஹள்ளியில் என்ற இடத்தில் வைத்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இந்த கடையை ₹ 30,000 ஆரம்ப மூலதனத்துடன் சுபம் சைனி தொடங்கினார் என்று கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு, கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக சந்தை வீழ்ச்சி அடைந்தது, கிரிப்டோ கரன்சியால் பெரும் தொகையை இழந்தார் என்றும் கூறப்படுகிறது.
How does he accept crypto?
— Ankit | MVP | GDE (@ankitsharma_007) September 28, 2022
Which all coins are accepted?
How does he decide the exchange rate?
I have so many questions 🙂
ஆச்சரியம் கொள்ளும் மக்கள்:
பல்வேறு தரப்பினரும் டீ கடை குறித்து, பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ட்விட்டர் பயனாளர் ஒருவர் தெரிவிக்கையில், அவர் எப்படி கிரிப்டோ கரன்சிகளை, சாதாரண பண பரிமாற்றத்திற்காக எவ்வாறு கணக்கிடுகிறார் என்ற கேள்வி எனக்கு எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
சாலை ஓரத்தில் டீ கடை வைத்திருக்கும் நபர், பலரும் புரிந்து கொள்ளவே சிரமப்படும் கிரிப்டோ கரன்சிகள் தொழில்நுட்பத்தை, பரிமாற்றத்திற்கு வைத்திருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியம் கொண்டு வருகின்றனர்.