(Source: Poll of Polls)
Bengaluru Power Cut (06.11.2025): பெங்களூருவில் நாளை மின் தடை! KPTCL & NHAI பராமரிப்பு பணி: உங்கள் பகுதியில் மின்வெட்டு உண்டா?
Bengaluru Power Cut (06.11.2025): பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) நாளை நவம்பர் 6 ஆம் தேதி பல இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 5 மணி நேரம் மின் தடையை செய்யவுள்ளது

கர்நாடக மின் பரிமாற்றக் கழகம் லிமிடெட் (KPTCL) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்க்கொள்ள அவசர பாரிமரிப்பு பணிகள் காரணமாக நாளை(06-11-25) பெங்களூரு நரின் பல இடங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு முழுவதும் பல்வேறு துணை மின் நிலையங்கள் மற்றும் 11 kV ஃபீடர்(Feeder) லைன்களில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, அக்டோபர் மாதம் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 6 ஆம் தேதி மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை:
இந்த மின்வெட்டு 5 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணி முன்னேற்றத்தைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு ஏற்ப்படும் பகுதிகள்:
சிக்கபனாவரா, சிக்கபனாவரா கிராமம், ஆல்டமரந்தோட்டி, தம்மேனஹள்ளி, பைலகேரே, வடேரஹள்ளி, கென்டெனஹள்ளி மற்றும் பெஸ்காம் வடக்கு பிரிவு–1 இன் கீழ் உள்ள சுற்றியுள்ள கிராமங்கள்.
கெம்பனஹள்ளி துணை மின்நிலைய எல்லைக்குள் இந்த மின் தடை ஏற்படும்.பராமரிப்பு முடிந்தவுடன் உடனடியாக விநியோகம் திரும்பும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மின்சார விநியோகத் தகவல்களை bescom.karnataka.gov.in அல்லது @NammaBESCOM என்ற சமூக ஊடகப் பக்கத்தில் கண்காணிக்கலாம்






















