Banned Organizations List: இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் என்னென்ன தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!
இந்தியாவில் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் சேர்த்து 43 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று தடை விதித்தது. இந்தியாவில் தடை விதிக்கப்படும் 43வது அமைப்பு இதுவாகும்.
இந்தியாவில் இதுவரை தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் விவரம் பின்வருமாறு :
- அல்கொய்தா
- அல்- உமர் – முஜாஹிதீன்
- அல் – பத்ர்
- அனைத்து திரிபுரா புலிகள் இயக்கம்
- அகில் பாரத் நேபாளி ஏக்தா சமஜ்
- மாவோயிஸ்ட்
- மார்க்சிஸ்ட் – லெனிஸ்ட் மக்கள் போர்
- தீந்தார் அஞ்சுமான்
- துக்தாரான் – இ – மிலாட்
- காரோ தேசிய விடுதலை படை
- ஹிஜிபுல் முஜாஹீதின்
- ஹர்கத்- உல் – முஜாஹீதின்
- இந்தியன் முஜாஹீதின்
- ஐ.எஸ்.ஐ.எஸ்.
- சர்வதேச சீக் இளைஞர் அமைப்பு
- ஜெய்ஷ்- இ – முகமது
- ஜமாத்- உல்-முஜாஹீதின் வங்காளதேசம்
- ஜம்மு-காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி
- ஜமாத்-உல்- முஜாஹீதின்
- கம்தாபூர் விடுதலை அமைப்பு
- காலீஸ்தான் விடுதலை அமைப்பு
- காலீஸ்தான் கமாண்டோ படை
- கங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி
- கங்லெய் யாவோல் கன்னா லூப்
- லஷ்கர் – இ – தொய்பா
- விடுதலைப் புலிகள் இயக்கம்
- மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய இந்தியா
- மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி
- தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகலாந்து
- தேசிய குடியரசு முன்னணி போராலந்து
- தேசிய விடுதலை முன்னணி திரிபுரா
- தேசிய சோசியலிஸ்ட் கவுன்சில் நாகலாந்து
- கங்லெய்பாக் மக்கள் புரட்சி படை
- மக்கள் புரட்சி படை
- மாணவர்கள் இஸ்லாமிய அமைப்பு இந்தியா (சிமி)
- தமிழ்நாடு விடுதலை படை
- தமிழ் மக்கள் மீட்பு படைகள்
- தெஹ்ரிக் – உல் – முஜாஹீதின்
- ஒருங்கிணைந்த அசாம் விடுதலை முன்னணி
- ஒருங்கிணைந்த தேசிய விடுதலை முன்னணி
- பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா
மேற்கண்ட 43 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் தடை விதிக்கப்பட்டு பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : PFI Ban : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவுக்கான தடை: வெடிகுண்டு தயாரிப்பு ஏடு.. மிஷன் 2041.. என்.ஐ.ஏ வட்டாரங்கள் தகவல்..
மேலும் படிக்க : Tribute to Lata Mangeshkar: 14 டன் எடை! 40 அடி உயரம் ! பிரம்மாண்ட வீணை! - லதா மங்கேஷ்கருக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய மோடி!