அவசர உதவி தேவையா..? எமர்ஜென்சி எண் மறந்துவிட்டதா..? புதிய முயற்சியை கையில் எடுத்த காவல்துறை..
பெங்களூர் முழுவதும் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களில் அரசும், மணிபால் மருத்துவமனையும் இணைந்து QR Code களை வைத்துள்ளனர்.
பெங்களூர் முழுவதும் உள்ள போக்குவரத்து விளக்கு கம்பங்களில் அரசும், மணிபால் மருத்துவமனையும் இணைந்து QR Code களை வைத்துள்ளனர்.
இதன் மூலம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருக்கும்போது மருத்துவ உதவி தேவைப்படுவோர் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு மருத்துவ உதவிகளை எளிதாக பெற முடியும் என கூறப்படுகிறது.
முதலுதவி மற்றும் இருதய மருத்துவ சேவைகள், மருத்துவ அவசரநிலைகளை வழங்கும் முயற்சியில், பெங்களூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் மணிபால் மருத்துவமனைகள் இணைந்து நகரின் போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் கியூஆர் குறியீடுகளை வைத்துள்ளனர்.
View this post on Instagram
இது என்னவென்று மக்கள் குழப்படைந்து வந்த நிலையில் இதுகுறித்து மணிபால் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்த குறியீடுகள் நபர் ஒரு கிளிக்கில் அவசர எண்ணுடன் இணைக்க உதவும் என்றும், அந்த நபருக்கு ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க அனுப்பப்படும் என்றும் கூறியது.
அவரச காலத்தில் சிபிஆர் ஒரு உயிர்காக்கும் நுட்பம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்திய மக்கள்தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தெரியும்.
மேலும், உலக இதய தினத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு , CPR மற்றும் பிற அவசரச் சேவைகள் போன்ற முதலுதவிகளை செயல்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரை உயிர்ப்பிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அந்த குறியீட்டில் விளக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தது.
மக்கள் பெரும்பாலும் அவசர எண்களை மறந்து விடுவதால், போக்குவரத்து போலீசாரின் உதவியுடன் அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் க்யூஆர் குறியீடுகள் நிறுவப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மண்டல தலைமை இயக்க அதிகாரி தீபக் வேணுகோபாலன் தெரிவித்தார்.