IPL: பொய் சொல்லி ஆர்.சி.பி. மேட்ச் பார்க்கப்போன ஊழியர்! மேனேஜரிடம் மாட்டிக் கொண்டது எப்படி?
Bangalore Employee: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காணுவதற்காக பொய் காரணம் சொல்லி சென்ற ஊழியர், அவரது மேலாளரிடம் மாட்டி கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தீவிர ரசிகையாக இருக்கும் பெங்களூர் ஊழியர், பொய் காரணம் கூறி விடுமுறை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்:
கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு என்றே, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஏனென்றால் மாநிலங்களை அடிப்படையாக வைத்து போட்டி நடைபெறுவதால், சிலர் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் , ஐ.பி.எல். போட்டியானது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமலே செல்கிறது.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி, பெங்களூரு மற்றும் லக்னோ இடையிலான போட்டி நடந்தது. அப்போது, பெங்களூர் தீவிர ரசிகையாக இருந்த ஒருவர், போட்டியை காணுவதற்காக, போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே புக் செய்து விட்டார். ஆனால், அன்று அலுவலகத்தில் விடுப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விடுப்பு கேட்ட பெங்களூரு ரசிகை:
இதையடுத்து, எப்படியாவது போட்டியை காண வேண்டும் என நினைத்த பெங்களூரு ரசிகை, எனக்கு அவசர கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், நான் அங்கு செல்ல வேண்டும். எனக்கு விடுப்பு தாருங்கள் என மெசேஜ் அனுப்பினார். இதை பார்த்த மேனேஜர், சரி விடுப்பு எடுத்து கொள்ளுங்கள் என அனுமதியும் கொடுத்துள்ளார்.
விடுமுறை கிடைத்ததையடுத்து, மகிழ்ச்சியாக போட்டியை காண சென்றார். அப்போது, அந்த ரசிகையின் மேனேஜர், பெங்களூர் மற்றும் லக்னோ இடையிலான போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அப்போது, அவரிடம் அவசரத்திற்காக விடுமுறை எடுத்த ஊழியர், டிவியில், தெரிந்தார். இதை பார்த்து பெரிதும் ஆச்சரியம் அடைந்தார்.
இதையடுத்து, அந்த ஊழியருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். நீங்கள் பெங்களூர் அணியின் தீவிர ரசிகையா என கேட்டார். அதற்கு அந்த ஊழியர், ஆமாம் என பதிலளித்தார். இப்போதுதான், மைதானத்தில் உங்களது சோகமான முகத்தை பார்த்தேன் என தெரிவித்தார். அந்த போட்டியின் போது லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த மெசேஜ் சேட்டை, சமூக வலைதளத்தில், பெங்களூர் ஊழியர் பகிர்ந்தார். இதுபோன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் இதுபோன்ற மேனேஜரிடம் மாட்டிக்கொண்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து நகைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.