Balapur Ganesh Laddu: ஒரு லட்டின் விலை ரூ.24.60 லட்சம்! விநாயகரின் லட்டுக்கு நாளுக்குநாள் கூடும் மவுசு!
Balapur Ganesh Laddu Auctioned: முதன்முதலாக 1994ஆம் ஆண்டு இந்த லட்டு 100 ரூபாய்க்கு ஏலம் போனது. அதன் பிறகு ஆண்டுதோறும் ஏலத் தொகை அதிகரித்து அதிகரித்து இன்று ரூ. 26.60 லட்சத்துக்கு ஏலம் சென்றுள்ளது.
தெலங்கானா மாநிலம், பாலாபூரின் பிரசித்தி பெற்ற கணேஷ் லட்டு வழக்கம்போல் இந்த ஆண்டும் பல லட்சங்களில் ஏலம் சென்றுள்ளது.
தெலங்கானா மாநிலம், பாலாபூரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில், கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பாலாபூர் லட்டு 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. இன்று (செப்.09) காலை தொடங்கிய இந்த ஏலத்தை டிஆர்எஸ் தலைவர் வி லக்ஷ்மா ரெட்டி கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்த லட்டு 18.90 லட்ச ரூபாய்க்கு ஏலம் சென்ற நிலையில், ஆந்திர மாநிலம், கடப்பாவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் ஏலம் எடுத்தனர்.
முதன்முதலாக 1994ஆம் ஆண்டு இந்த லட்டு 100 ரூபாய்க்கு ஏலம் போனது. அதன் பிறகு ஆண்டுதோறும் ஏலத் தொகை அதிகரித்து அதிகரித்து இன்று ரூ. 26.6 லட்சத்துக்கு ஏலம் சென்றுள்ளது.
#Balapur Ganesh Laddu was auctioned for RS 24.60 Lakh 🙏🙏 pic.twitter.com/BcYCv894z8
— Fukkard (@Fukkard) September 9, 2022
கடந்த ஆண்டு ரூ.18.90 லட்சம் என்ற உச்ச விலைக்கு லட்டு ஏலம் போனது. தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ், பாலாபூரைச் சேர்ந்த மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் லட்டை ஏலம் எடுத்தனர். பாலாபூர் கணேசர் கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தெலுங்கானா கல்வி மந்திரி சபிதா ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The famed Balapur Ganesh Bangaru Laddu in Hyderabad was auctioned for a all time record of Rs 24.60 lakh. It was bagged by K Laxma Reddy. Last year it was auctioned for Rs 18.90 lakh. This is Rs 5.70 lakh more than previous year. @NewIndianXpress @XpressHyderabad pic.twitter.com/WarWhKR6nY
— Bachanjeetsingh_TNIE (@Bachanjeet_TNIE) September 9, 2022
முன்னதாக 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக லட்டு ஏலம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த லட்டை ஏலம் விட்ட தொகையின் ஒரு பகுதி அடுத்த ஆண்டுக்கான கணேஷ் பூஜை கொண்டாட்டத்திற்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள தொகை பாலாபூர் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
Balapur ladddu to be presented to CM #KCR.
— Jagan Patimeedi (@JAGANTRS) September 2, 2020
The Balapur Ganesh Utsav Samithi has decided to present the famous Bangaru laddu prasadam of Balapur Ganesh to CM KCR. A God blessing probably to which his prasad reaches the beloved devotee without any bidding. pic.twitter.com/0XvEryPakA