மேலும் அறிய

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும்.

சபரிமலையில் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ள நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவ.16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவ.17-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் தொடங்க உள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் இவர்களின் பாதுகாப்பு, தரிசனம் மற்றும் உரிய வசதிகளை செய்து தருவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான பல்வேறு விதிமுறைகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தரிசனத்துக்கு முன்பதிவு அவசியம். அதில் குறிப்பிட்ட நேரத்தை கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும். அப்போதுதான் நெரிசல் தவிர்க்கப்படும்.


சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

முன்பதிவு செய்யாமல் வரும் அனைவருக்குமே ஸ்பாட் புக்கிங் அளிக்க முடியாது. வரையறை இல்லாத கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த ஆண்டு இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப்படும். ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் வரும் வகையில் பயணங்களை திட்டமிடுவது அவசியம். செய்ய வேண்டியவை மலையேறும் போது ஒவ்வொரு 10 நிமிடத்துக்குப் பிறகு 5 நிமிடங்கள் ஓய்வு எடுக்கவும். மரக்கூட்டம், சரம் குத்தி, நடைப்பந்தல் வழியே சந்நிதானம் செல்லவும். பதினெட்டாம் படிக்குச் செல்கையில் வரிசை முறையை பின்பற்றுவது அவசியம்.தரிசனம் முடித்து திரும்பும்போது நடைப் பந்தல் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். கழிப்பறைகளை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். டோலி தேவைப்படுவோர் தேவசம் கவுண்டரில் மட்டும் பணம் செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனம் பழுது, விபத்து, மருத்துவ அவசரம், மிருக ஆபத்து, குற்றம், காணாமல் போனோர் போன்ற அவசர நிலைகளில் 14432 ஹெல்ப் லைன் எண்ணில் போலீசை தொடர்புகொள்ளலாம். பம்பா, சன்னிதானம் மற்றும் யாத்ரிக பாதைகள் சுத்தமாக வைத்திருக்கவும். ஒதுக்கப்பட்ட நிறுத்தும் இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் கழுத்தில் முகவரி மற்றும் தொடர்பு எண்கொண்ட அடையாள அட்டைகளை அணிவிக்கவும்.


சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! மண்டல கால கட்டுப்பாடுகள்: முக்கிய அறிவிப்பு வெளியீடு!

கோயில் வளாகத்தில் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. புகைபிடித்தல், மது, புகையிலை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். வரிசையில் செல்லும் போது ஓட வோ, முண்டியடித்தபடி செல்லவோ கூடாது. ஆயுதங்கள் அல்லது வெடிப்புப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். கழிவுகளை குப்பைத் தொட்டிகளுக்கு வெளியே போடக்கூடாது. பதினெட்டம்படியில் தேங்காய் உடைக்க வேண்டாம். 18ம் படியில் ஏறும் போது மண்டியிட கூடாது. அப்பர் திரு முற்றம் அல்லது தந்த்ரிநாடா பகுதிகளில் ஓய்வெடுக்க வேண்டாம். நடைப்பந்தல் மற்றும் லோயர் திருமுற்றம் பகுதிகளில் பாய், போர்வைகளை விரிக்கக்கூடாது. புனிதமான பம்பையில் ஈர ஆடைகளை விட்டுச் செல்லக் கூடாது. இவ்வாறு தேவசம் போர்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விதிமுறை முறையாக பின்பற்ற வேண்டும். பக்தர்கள் அடுத்தடுத்து இந்த இடத்தை பயன்படுத்த உள்ளதால் ஒவ்வொரு பக்தரும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். வாகனங்களின் பதிவு எண்ணை மறைத்து எந்தவித அலங்காரமோ, கூடுதல் முகப்பு விளக்குகளையோ பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget