Attack on Rakesh Tikait: வேளாண் சட்டப் போராட்டங்களை ஒருங்கிணைத்த ராகேஷ் திகாயத் மீது மை வீசி தாக்குதல்!
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு வாபஸ் பெறப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமானவர் பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் மீது மைக் மற்றும் கறுப்பு மை வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டப் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்
முன்னதாக மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு வாபஸ் பெறப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக, களத்தில் போராடியவர்களின் முகமாகத் திகழ்ந்து போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் முக்கியமானவர் பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத்.
இவர், முன்னதாக பெங்களூரு விவசாய சங்கத் தலைவர் முறைகேடாக பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு குறித்து பேசுவதற்காக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
மேலும் படிக்க: ஏன் சீட்டு கொடுக்கல... எனக்கு என்ன குறைச்சல்.? ட்விட்டரில் சீறிய நக்மா! தொடங்கிய பஞ்சாயத்து!
ஆளும் பாஜக அரசே காரணம்
அப்போது ராகேஷ் திகாயத் மீது மைக் மற்றும் கறுப்பு மை வீசி எறிந்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு சரியான முறையில் பாதுகாப்பு வழங்காததாக ராகேஷ் திகாயத் புகார் தெரிவித்துள்ளார்
Bengaluru | No security has been provided by local police here. This has been done in collusion with the government: Bhartiya Kisan Union leader Rakesh Tikait on ink attack on him pic.twitter.com/P5Jwcontc7
— ANI (@ANI) May 30, 2022
'திட்டமிட்ட சதி’
”நாங்கள் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் மைக்குகளைக் கொண்டு எங்களை அடிக்கத் தொடங்கினர். இது கர்நாடக அரசு மற்றும் காவல்துறையினரின் தோல்வி. இது ஒரு திட்டமிட்ட செயல். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்'' என ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: UIDAI Update: ஆதார் கார்டை எப்படிதான் பயன்படுத்த வேண்டும்: குழப்பத்துக்கு தெளிவாக விளக்கம் கொடுக்கும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்